News about Naga Chaitanya's new love -  Samantha reply

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யா மற்றும் சமந்தா முதல் முறையாக இணைந்து நடித்தனர். இதனைத் தொடர்ந்து சமந்தா - நாக சைதன்யா இருவரும் இணைந்து 'மனம்', 'ஆட்டோ நகர் சூர்யா' போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் விவகாரத்தை அறிவித்து பிரிந்தனர். அதன் படி இருவரும் பிரிந்து தங்களது தொழிலில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.

Advertisment

இதனிடையே அண்மையில் நாக சைதன்யா, பிரபல நடிகை ஷோபிதா துலிபாலா இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில், 'சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கு சமந்தாதான் காரணம் எனவும் தற்போது வெளியாகியுள்ள நாக சைதன்யா - ஷோபிதா துலிபாலா காதல் செய்தியும் சமந்தா தரப்பு திட்டமிட்டு செய்துள்ளது' எனவும் செய்திகள் வந்தன.

Advertisment

இந்த செய்திக்கு சமந்தா தன் கருத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், "பெண்கள் மீதான வதந்திகள் என்றால் அது உண்மையாக இருக்கும். ஆண்கள் மீதான வதந்திகள் என்றால் அது பெண்களால் உருவாக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களே இதனைக் கடந்து சென்றுவிட்டனர். நீங்களும் கடந்து செல்லுங்கள். உங்கள் பணியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். கடந்து போங்கள்" என காட்டமாக பதிலளித்துள்ளார் சமந்தா.

Advertisment