/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-12_4.jpg)
தமிழ் சினிமாவின் பிதாமகனாக போற்றப்படுபவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனை தொடர்ந்து இவரது மகன்களான பிரபு மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் நடிக்க வந்தனர். இதில் பிரபு, பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ராம்குமார் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்துள்ளார். இருவரும் இணைந்து 'சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இவர்களை தொடர்ந்து, பிரபுவின் மகனான விக்ரம் பிரபு 'கும்கி' படம் மூலம் அறிமுகமாகி 'சிகரம் தொடு', 'டாணாக்காரன்' உள்ளிட்ட ஹிட் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அடுத்து ராம்குமாரின் முதல் மகனான துஷ்யந்த் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் ராம்குமாரின் இரண்டாவது மகனான தர்சன் நடிகராக அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தர்சன் முறைப்படி பயிற்சி பெற்றுள்ளார் எனக்கூறப்படுகிறது. விரைவில் தர்சன் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)