'விக்ரம்' படம் குறித்து வெளியான புது அப்டேட்

New update on 'Vikram' movie

கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் பாடல் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'பத்தல பத்தல' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலை கமல்ஹாசன் எழுதிப்பாடியுள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வரும் 15-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. ஆனால் இப்படத்தின் 'பத்தல பத்தல' பாடல் மே 11-ஆம் தேதியே வெளியாகிறது. கமல்ஹாசன் எழுதி பாடியுள்ளதால் இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

actor kamal hassan actor vijay sethupathi anirudh lokesh kanagaraj vikram movie
இதையும் படியுங்கள்
Subscribe