Advertisment

ஓடிடியில்  புதுப்படங்கள் ரிலீஸ்.... தயாரிப்பாளர்களின் வேண்டுகோள்...

jo

ஜே.ஜே. பெட்ரிக்இயக்கத்தில்,ஜோதிகாநடித்து,சூர்யாதயாரித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்த படம் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வெளியாவதாக இருந்தது. கரோனா தோற்று காரணமாகதிரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில்மேமாதம் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீசாக இருக்கிறது.

Advertisment

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையே பெரும் பிரச்னை போய்க்கொண்டிருக்கிறது. மேலும், சூர்யா மற்றும் ஜோதிகாதயாரிப்பு படங்கள்இனி வெளியாகாது என்று தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஒருமனதாக முப்பது தயாரிப்பாளர்கள் இணைந்துஇது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "திரைப்பட தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன் வருவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இத்தகைய பிரச்சனைகள் பெரிய நடிகர்கள்-இயக்குனர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.

மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறோம்.

இந்த கரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறோம். இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

jothika
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe