/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Aravindh Srinivasan.jpg)
இந்திய சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான பரிணாம வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையரங்கு மட்டுமல்லாமல் 'OTT' எனப்படும் டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதன் முறையாக, முதல் முயற்சியாக 'யு டியூப்' இனையதளத்திற்காக பிரத்யேகமாக படம் தயாரிக்கும் முயற்ச்சியில் இறங்கியிருக்கிறது NextGen எனும் நிறுவனம். 'Crowd Funding' எனப்படும் கூட்டு தயாரிப்பில் இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கிறது. இதன் ஒருங்கினைப்பாளரான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்த முயற்சி குறித்து கூறுகையில்... ''யு டியூப்' இனையதளம் இன்று திரையுலகில் முக்கிய பங்காற்றி வருகிறது. படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என ஒரு படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் 'யு டியூப்' இனையதளத்தின் பங்கு அபாரமானது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இது வரை எத்தனையோ படங்கள் 'யு டியூப்' இணையதளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. அப்படங்கள் ஒன்று திரையரங்கு சிக்கலினாலோ, தணிக்கை பிரச்சனையாலோ அவ்வாறு வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை 'யு டியூப்' வெளியீட்டிற்கென்று இந்தியாவில் படங்கள் தயாரிக்கப்பட்டதில்லை. இதை பற்றி எனது நண்பர்களிடம் விவாதித்த போது 'யு டியூப்' வெளியீட்டிற்கென்றே ஒரு படத்தினை பிரத்யேகமாக தயாரித்தால் என்ன என்ற யோசனை எழுந்தது. அவர்களும் இது ஒரு நல்ல முயற்சி என்றும் அதில் தயாரிப்பாளர்களாக தாங்களும் பங்குகொள்வதாகவும் நம்பிக்கை தந்தனர். இதனை தொடர்ந்து இதற்கான கதை தெர்வு செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு தற்போது அதை இறுதி செய்து விட்டோம். இப்படத்தினை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கவிருக்கிறோம். இப்படம் முதன்மையாக 'யு டியூப்' இனையதளத்தில் வெளியானாலும் இதர 'OTT' எனப்படும் டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடும் முயற்சியிலும் ஈடுபடவிருக்கிறோம். பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கவிருக்கும் இத்திரைப்படம் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான இலக்கு. இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரத்தை விரைவில் வெளியிடவிருக்க்கிறோம்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)