/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/padamn_0.jpg)
ஸ்கை வாண்டர் எண்டெர்டைமண்ட் நிறுவனத்தின் சார்பில் ஜெயலட்சுமி தயாரித்து எழுதி இயக்க புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் லிங்கேஷ் மற்றும் நாயகி லியா ஆகியோர் நடித்துள்ளனர். காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய இந்தியா வரும் நாயகி லியா, மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது காதல் வருகிறது. இதற்கிடையில், லிங்கேஷுக்கு அவரது மாமன் மகளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டிஅவர்கள் காதல் நிறைவேறியதா?, காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது தான் இப்படத்தின் கதை எனச் சொல்லப்படுகிறது.
கபாலி, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும், ‘காலேஜ் ரோட்’ படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ்,இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த லியா, இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அறிமுக நடிகர் காட்பாடி ராஜன், மசூசூதனன், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ், திவ்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மூடர்கூடம் படப்புகழ் டோனி ஜான் ஒளிப்பதிவு செய்ய, சாண்டி சாண்டெல்லோ இசையமைத்துள்ளார். கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி ஆகியோர் இப்படத்தில் பாடல் வரிகள் எழுதியுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)