பிகில் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டு தற்போது கர்நாடகாவில் சிமோகா மத்திய சிறையில் ஷூட் செய்யப்பட்டது.

Advertisment

vijay master

டிசம்பர் தொடக்கத்திலிருந்து இந்த பகுதியில் ஷூட்டிங்கை தொடங்கியுள்ள படக்குழு இந்த மாத இறுதி வரை ஷூட்டிங்கை நடத்துவதாக முன்பு தகவல் வெளியானது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் சிமோகாவில்தான் எடுக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

Advertisment

புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. தளபதி 64 என்று சொல்லப்பட்டு வந்த இப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டிருந்தது. இதன்பின் பொங்கல் பண்டிகைக்கு இரண்டாம் லுக்கையும் வெளியிட்டடது படக்குழு. மேலும் விஜய் சேதுபதியின் லுக்கை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது படக்குழு. அதனால்தான் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் அன்று அவரது தோற்றத்தில் போஸ்டரை ரிலீஸ் செய்து வாழ்த்து தெரிவிக்காமல் சாதாரணமக வாழ்த்து தெரிவித்தது படக்குழு.

இப்படத்தை தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவுடன் மேலும் செவன் ஸ்கிரீன்ஸ் லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் ஆகிய இருவரும் இணைந்து துணை தயாரிப்பு செய்வதாக படக்குழு இரண்டாம் போஸ்டரில் அறிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் விஜய் மீசை, தாடி ட்ரிம் செய்த தோற்றத்தில் இப்படத்தின் நடிகை மாளவிகா மனோகரனுடன் பேசுவது போன்று புகைப்படம் ஒன்று லீக்காகியுள்ளது.