Advertisment

மனைவியின் பிறந்தநாளில் அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ; போனி கபூர் திட்டம்

new information released about boney kapoor, ajith kumar in 'ak61' movie first look

Advertisment

'வலிமை' படத்தைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கும் 'ஏகே61' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அஜித் தனிப்பட்ட காரணத்திற்காக லண்டன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகிவைரலானது.

இந்நிலையில் 'ஏகே61' படத்தின்டைட்டில்மற்றும்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டர்வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதிவெளியாகவுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 13,போனிகபூரின் மனைவி மறைந்த ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பதால் அந்நாளில் 'ஏகே61' படத்தின்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டரைசர்ப்ரைஸாகவெளியிடபோனிகபூர்திட்டமிட்டுள்ளார்.

விரைவில் இதுகுறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பைபோனிகபூர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

h.vinoth Boney kapoor ACTOR AJITHKUMAR AK61
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe