New information released about ajith in 'AK61' movie

Advertisment

வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'ஏகே 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் மஞ்சு வாரியர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பை புனேவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதில் மஞ்சு வாரியர் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பை ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.