/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-2_47.jpg)
ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் 'சந்திரமுகி'. 'சிவாஜி ப்ரொடக்ஷன்' தயாரித்திருந்த இப்படத்தில் பிரபு, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசகர் இசையமைத்திருந்தார். இப்படம் மலையாளத்தில் 1993-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான 'மணிசித்ரதாலு' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தமிழில் ரீமேக் செய்வதற்கு முன்பே கன்னடத்தில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. 'ஆப்தமித்ரா' என்ற தலைப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு, நடிகர் ராகவா லாரன்ஸ், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை 'லைகா நிறுவனம்' தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் 'ருத்ரன்' மற்றும் 'அதிகாரம்' படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)