/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/14_45.jpg)
இயக்குநர் பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே "தான் நலம் பெற்று வருவதாக" ஒரு அறிக்கை வெளியிட்டார் பாரதிராஜா. மருத்துவமனை சார்பிலும் இது தொடர்பாக அறிக்கை வெளியிடபட்டிருந்தது. மேலும் இயக்குநர் சுசீந்திரன் தான் இயக்கும் 'வள்ளி மயில்' படத்தின் படப்பிடிப்பில் இந்த மாதம் இறுதியில் பாரதிராஜா கலந்து கொள்ளவுள்ளார் என நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் பாரதிராஜாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2 அல்லது 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)