/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-7_17.jpg)
2015 -ஆம் ஆண்டு வெளியான 'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். இவர், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவு பெற்றது. படத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால், சி.ஜி. பணிகளுக்கு அதிக நாள் தேவைப்படுகிறது. இதனால்தான் படம் வெளியாவதில் தாமதமாகிறது எனப் படக்குழு தெரிவித்திருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் 'வேற லெவல் சகோ' பாடல் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் 'அயலான்' படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)