Advertisment

புதிய அவதாரம் எடுத்த ஸ்ருதிஹாசன் - குவியும் வாழ்த்துக்கள்

New incarnation by Sruthihaasan

தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துவருபவர் ஸ்ருதிஹாசன். நடிகர் பிரபாஸ் நடிப்பில்உருவாகிவரும்‘சலார்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ‘கே ஜி எஃப்’ படப்புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இதனிடையே மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் அவரின் 154 வது படத்திலும், பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். சினிமாவில் பயணித்து வரும் திரை பிரபலங்கள் பலரும் தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன், பல்ப் எனும் நிறுவனத்துடன் இணைந்து தோல் பராமரிப்பிற்கான புதிய தயாரிப்புகளை 'பிஎக்ஸ்எஸ் லைன்' எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார். தோல் பராமரிப்பு என்றால் என்ன? என்பதையும், அதனை பாரம்பரிய தரநிலைகளுடன் தோல் பராமரிப்பிற்கான தயாரிப்புகளை இந்நிறுவனம் உருவாக்குகிறது. உண்மையான தோல் மீது மக்கள் எவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதை பற்றி இந்நிறுவனம் கூறுகிறது.

Advertisment

இதுதொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், '' பல்ப் உடனான என்னுடைய ஒத்துழைப்பின் மூலம் நான் யார்? நான் என்ன விரும்புகிறேன்? நான் எதை நம்புகிறேன்? என்பதை பிரதிபலிக்கிறது. இந்த தயாரிப்புகளின் ஒவ்வொரு பகுதியையும் சிறப்பாக கையாளவும், வடிவமைக்கவும் பல்ப் குழுவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இதை உருவாக்க எனக்கு நேரம் கிடைத்தது. மேலும் இந்த தயாரிப்புகள் அனைத்தையும் நீங்கள் விரும்புவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்'' என கூறியுள்ளார்.

நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஸ்ருதிஹாசன், தற்போது தொழிலதிபராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தொழிலதிபராக வெற்றி பெற அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

shruthi hassan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe