Advertisment

அஜித், விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படம்?

New film to be act by Ajith and Vijay

Advertisment

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித், தற்போது போனி கபூர் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். குடும்ப பின்னணி படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் இணைந்து ஒரு புதிய படம் நடிக்கவுள்ளதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார். மேலும் அப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும், பான் இந்தியா படமாக இப்படம் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படமாகும். ஏற்கனவே 1995-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் அஜித் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

gangai amaran venkat prabhu ACTOR AJITHKUMAR actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe