ADVERTISEMENT

'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அறிவிப்பு - யூகிக்கும் ரசிகர்கள்

07:29 PM Jun 27, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

சிம்பு, 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துமுடித்துள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவு பெற்று தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படத்தின் அப்டேட் நாளை மாலை 6.15 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனைத் தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களை யூகிக்கச் சொல்லியுள்ளனர். அனேகமாகப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றன

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT