Advertisment

“தமிழ் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும்” - அறிமுக நாயகி ஜிஜ்னா ராதாகிருஷ்ணன்

new actress jijina press meet

Advertisment

அறிமுக நாயகி ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் தற்போது பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். தியேட்டர் ஆர்டிஸ்ட்டான ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். தற்போது, ​​அவர் பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 'மே ஹூன் மூசா' படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்தார். மறைந்த இயக்குநர் சித்திக் வழிகாட்டுதலின் கீழ் அவரது மற்றொரு படம் 'போரட்டு நாடகம்' மே மாதம் வெளியிடத்தயாராக உள்ளது. இதுமட்டுமல்லாது தற்போது அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சலாம் புஹாரியின் 'உடம்பஞ்சோலா விஷன்' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அவருக்குப் பிடித்த நடிகராக அமீர் கான் பெயரைக் குறிப்பிடுபவர், இன்ஸ்பிரேஷன் என நடிகை சுஷ்மிதா சென் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரே ஆகியோரது பெயரை உற்சாகமாக சொல்கிறார். பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றத் தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த விருப்பத்தை நிறைவேற்றத்தமிழ் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe