/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/47_12.jpg)
'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கத்தில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில், நயன்தாரா நடிப்பில் உருவான 'நெற்றிக்கண்' திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இப்படத்தில் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும், நடிகை நயன்தாராவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில், 'நெற்றிக்கண்' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அடிவிசேஷ் இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)