/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/30_17.jpg)
'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கத்தில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில், நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்தில், அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ளார்.
முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா முதல் அலை காரணமாக தடைபட்டது. பின், நிலைமை சீரானதும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தது. இப்படத்தின் இறுதி வடிவத்தை நடிகை நயன்தாரா சமீபத்தில் பார்த்ததாகவும், அவருக்குப் படம் மிகவும் பிடித்திருந்ததால், இயக்குநர் மிலிந்த் ராவிற்கு பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது கரோனா இரண்டாம் அலை காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்தது. இது தொடர்பான ஒப்பந்தம் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் கையெழுத்தானது. இதையடுத்து, கடந்த மாதஇறுதியில் 'நெற்றிக்கண்' படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்களையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ட்ரைலர், படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த நிலையில், நெற்றிக்கண் திரைப்படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)