Advertisment

அமேசானுக்கு போட்டியாக 4 முன்னணி தமிழ் இயக்குனர்களுடன் களமிறங்கும் நெட்ஃப்ளிக்ஸ்!!!

netflix

Advertisment

ஓடிடி பிளாட்ஃபார்ம்கள் வளர்ச்சியடைந்த பின்னர் அந்தாலஜி திரைப்படங்களில் வருகை அதிகரித்துள்ளது. அந்தாலஜி என்றால் ஒரு திரைப்படத்தில் நான்கு கதைகள் அல்லது அதற்கு மேற்பட்ட கதைகள் உள்ளடக்கியது. அந்த ஒவொரு கதையையும் வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கி ஒரு முழு நீள படமாக வெளியிடுவது அந்தாலஜி ஆகும்.

தமிழ் திரையுலகிலும் அந்தாலஜி படங்கள் அவ்வப்போது வந்தது. அதில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய படம் என்றால் சில்லுக்கருப்பட்டி ஆனால், இந்த படத்தை ஒரே இயக்குனர்தான் இயக்கினார்.

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக பாவ கதைகள் என்ற தலைப்பில் நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து அந்தாலஜி படம் இயக்குகிறார்கள். இதற்காக வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கைகோத்துள்ளனர்.

Advertisment

'பாவகதைகள்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த அந்தாலஜி படம் காதல், அந்தஸ்து, கெளரவம் உள்ளிட்ட கருவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆர்.எஸ்.வி.பி. மூவிஸ் நிறுவனம் மற்றும் ப்ளையிங் யூனிகார்ன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தில் அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

netflix
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe