ott

தற்போதைய டிஜிட்டல் உலகில் மிகவும் பிரபலமாக இருப்பது ஓ.டி.டி. புதிய படங்கள் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமல், ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் அளவிற்கு உலகம் முழுவதும் வளர்ந்துவிட்டது ஓ.டி.டி. குறிப்பாக இந்த கரோனா லாக்டவுன் சமயத்தில் ஓ.டி.டி நிறுவனங்கள், பல வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறது.

Advertisment

உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை வைத்திருகும் ஓ.டி.டி நிறுவனம் நெட்ஃப்ளிக்ஸ். இந்தியாவில் தற்போது அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களை ஈர்க்க, ஏதேனும் ஒரு வார இறுதியில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது சேவையை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சேவை இந்தியாவிலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இதை அந்நிறுவனத்தின் சீஃப் ப்ரோடக்ட் ஆஃபிசர் கிரெக் பீட்டர்ஸ் கடந்த அக்டோபர் மாதம் உறுதி செய்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், இந்த 'நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரீம் பெஸ்ட்' குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதுஅந்நிறுவனம். வருகிற டிசம்பர் மாதம் 5 மற்றும் 6 -ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில், யார் வேண்டுமானாலும் தங்களின் மெயில் அல்லது மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்துகொள்ளலாம்.மேலும், அவர்களிடம் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் விவரங்கள் கேட்க மாட்டோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு லாகினை உருவாக்கி எந்தச் சாதனத்திலும் பயன்படுத்தலாம் என்றும் படங்கள், சீரிஸ், ஆவணப் படம் என அனைத்தையும் இலவசமாகக் கண்டு களிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா.