Skip to main content

"அவரின் நேர்மையையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்கிறேன்" - நெல்சன் இரங்கல்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

neson about shavaji

 

குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து பிரபலமடைந்த, நடிகர் ஆர்.எஸ். சிவாஜி (67) காலமானார். கமல்ஹாசன் மற்றும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட பல படங்களில் நடித்துள்ளார். கமலுடன் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் பேசிய 'சார் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க...' என்ற வசனம் மக்கள் மனதில் பிரபலமானதாக இருந்தது. 

 

அதைத் தாண்டி வில்லன், ஆயுத எழுத்து, சூரரைப் போற்று உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். யோகி பாபு நடிப்பில் நேற்று (01.09.2023) வெளியான லக்கி மேன் படத்தில் நடித்துள்ளார். மேலும் வருகிற 15ஆம் தேதி வெளியாகவுள்ள சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் இன்று காலை உடல் நலக் குறைவு காரணமாக சிவாஜி மரணமடைந்துள்ளது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

அந்த வகையில் நெல்சன் திலீப்குமார், அவரது எக்ஸ் தள பக்கத்தில் "கோலமாவு கோகிலா படத்தில் பணியாற்றிய போது சிவாஜியுடைய நேர்மையையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்கிறேன், அவருடைய குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெயிலர் 2 வேண்டாம் என நெல்சன் சொன்னார். ஆனால்...” - வசந்த் ரவி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vasanth ravi about jailer 2

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் நாளை(ஏப்ரல் 18) வசந்த் ரவி பிறந்தநாள் காண்கிறார். இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
  
அவர் பேசியதாவது, “என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்களா?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகத்தான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது. நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்றுதான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்.  அது உண்மையிலேயே பெரிய விஷயம். அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. 

‘ஜெயிலர்2’ வருகிறது  என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று  நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர் 2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் , ‘பார்ட் 2க்கான லீட் இருக்கு சார் என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட். படங்கள் ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

Next Story

ரஜினியுடன் மீண்டும் நடிக்கும் நயன்தாரா

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
nayanthara in rajini jailer 2

ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தை தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். வருகிற ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 நடிக்க ரஜினி ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே தனது 172வது படத்திற்காக மாரி செல்வராஜுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ரஜினியுடன் சந்திரமுகி, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கும் குசேலன் படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.