Advertisment

இன்று மாலை நேர்கொண்ட பார்வை ட்ரைலர் வெளியீடு....

விஸ்வாசம் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது ரிலீஸுக்கான அனைத்து வேலைகளையும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படம் பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர்தான் தயாரிக்கிறார்.

Advertisment

nerkonda parvai

ஆந்திராவிலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் நடைபெற்று இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தலயின் 59 வது படமான இதை முடித்துவிட்டு தலயின் 60வது படத்தையும் போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத்தான் இயக்குகிறார் என்று சொல்லப்படுகிறது. அது முழுக்க முழுக்க வினோத் ஸ்டைலில் உருவாகும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கக்கூடும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisment

இந்நிலையில்,இன்று மாலை ஆறு மணிக்கு ட்ரைலரை ரிலீஸ் செய்ய இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ajithkumar nerkonda parvai
இதையும் படியுங்கள்
Subscribe