ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் அஜித்தை வைத்து தமிழில் நேர்கொண்ட பார்வை என்றொரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ajithkumar

இந்த படத்தை தொடர்ந்து அஜித் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்து வருகிறது படக்குழு. போனி கபூர் பல இடங்களில் அதிகாரப்பூர்வமாக இதை தெரிவித்துள்ளார்.

Advertisment

சமீபத்தில் அஜித் குறித்து பரவிய வதந்திக்கு ட்விட்டரில் போனிகபூர் ஒரு பதிவை போட்டு முற்று புள்ளி வைத்துள்ளார். இதனையடுத்து ஆகஸ்ட் 8ஆம் தேதி நேர்கொண்ட பார்வை படம் வெளியிடுவதாக அண்மையில் போனி கபூர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு ‘தீ முகம்’ என்ற தீம் பாடலை வெளியிடுவதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.

Advertisment

அஜித் ரசிகர்கள் இன்றி பலருக்கும் யுவன் அஜித் காம்போவில் வெளியாகும் தீம் பாடலுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். பில்லா, மங்காத்தாவை போல் இந்த படத்தில் ஒரு தீம் அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துவருகிறார்கள்.