/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/86_48.jpg)
தமிழில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நெப்போலியன். நடிப்பதை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். திமுக சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் மத்திய இணையமைச்சராகவும் இருந்தார். பின்னர் பாஜகவில் இனைந்து செயல் பட்டு வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் தனுஷ், சிறுவயதிலே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவர், தனது குடும்பத்துடன் அங்கேயே குடியேறிவிட்டார்.
இந்த நிலையில் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த அக்ஷயாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து தனுஷ், தனது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் சிலர் நெகட்டிவாக பேசுவதாக சொல்லி அது எனக்கு மோட்டிவேஷ்னலாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனுஷ் - அக்ஷயா திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நேற்று(06.11.2024) நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் சரத்குமார், ராதிகா, மீனா, நடன இயக்குநர் கலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)