Advertisment

"ஒருத்தன் நல்லவனா இருக்குறதும், கெட்டவனா இருக்குறதும் ஜாதியில இல்ல சார்" - வைரலாகும் உதயநிதி படத்தின் டீசர்

Nenjuku Needhi teaser released

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'ஆர்டிக்கள் 15' தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b4931b18-7234-491e-b133-50380bf5ef3b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_20.jpg" />

Advertisment

தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.‘நெஞ்சுக்கு நீதி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே படத்தின்டப்பிங் பணிகளிலும்படக்குழு கவனம் செய்து வருகிறது.

இந்நிலையில்நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.'ஆர்டிக்கள் 15' படத்திற்கு சற்றும் விறுவிறுப்பு குறையாமல் ஆதிக்க சாதியினரால் பட்டியலின மக்களுக்கு ஏற்படும் கொடுமைகளை காட்டியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

article15 arunrajakamaraj udhayanithi stalin nenjukku needhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe