/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-14.jpg)
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் 'நெஞ்சுக்கு நீதி'. இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் மற்றும் 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நேற்று இரவு 'நெஞ்சுக்கு நீதி' படத்தை பார்த்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் படம் நன்றாக இருந்தாக கூறி படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இப்படம் மே 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் 2019-ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஆர்டிக்கள் 15' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் இடம்பெற்றுள்ள 'எங்கே நீதி' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை மற்றும் பணிகளில் அவர்கள் படும் துயரங்கள் பற்றி பேசும் விதமாக இப்பாடல் வெளிவந்துள்ளது. இப்பாடல் பலரின் கவனத்தை ஈர்த்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)