Advertisment

"கற்பூரம் ஏந்தியும் கண்ணகாட்டலே, நெய் சோற போட்டுமே மண்ணக் காக்கல" - கவனம் ஈர்க்கும் உதயநிதி படத்தின் பாடல்

Nenjuku Needhi Sevakkaattu Seemaiellaam song out now

Advertisment

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தமிழில்அருண்ராஜா காமராஜ் இயக்க,உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனைதொடர்ந்து நேற்று வெளியான இப்படத்தின் ட்ரைலர்தற்போது வரை யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வரும் நிலையில் படக்குழு நெஞ்சுக்கு நீதி படத்தின் முதல் பாடலான"செவக்கட்டும் சீமையெல்லாம்"பாடலை வெளியிட்டுள்ளது. திபு நினன் தாமஸ் இசையில் யுகபாரதி மற்றும் அருண்ராஜா காமராஜ் வரிகளில் அய்யாதுரை பாடியுள்ள இந்த பாடல் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

Advertisment

Boney kapoor nenjukku needhi Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Subscribe