Advertisment

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உதயநிதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Nenjuku Needhi movie release on may 20

Advertisment

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தமிழ் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நெஞ்சுக்கு நீதி படம் மே 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Boney kapoor nenjukku needhi Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Subscribe