nenjukku neethi teaser new release date announced

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'ஆர்டிக்கள் 15' தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.‘நெஞ்சுக்கு நீதி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே படத்தின்டப்பிங் பணிகளிலும்படக்குழு கவனம் செய்து வருகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="81351321-a961-4d0a-a5bf-19f82719a04e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_8.jpg" />

சமீபத்தில் இப்படத்தின் டீசர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (6.2.2022) வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவால் டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில்இப்படத்தின் புதிய டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நெஞ்சுக்கு நீதி படத்தின்டீசர் நாளை (11.2.2022) மதியம் 12.20 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.