Advertisment

'நெஞ்சுக்கு நீதி' படத்தின் டீஸர் அப்டேட்... குஷியில் ரசிகர்கள்!

Nenjukku Needhi teaser update out now

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'ஆர்டிக்கள் 15' தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.‘நெஞ்சுக்கு நீதி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே படத்தின்டப்பிங் பணிகளிலும்படக்குழு கவனம் செய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் படத்தின் டீசர் குறித்தஅறிவிப்பை தயாரிப்பாளர்போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதன்படி நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர் நாளை (6.2.2022) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

Boney kapoor udhayanithi stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe