சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த 'கனா' படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்நிறுவனம் அடுத்ததாக யுடியூப் பிரபலங்களான பிளாக் ஷீப் குழுவின் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இதன் அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு நேற்று வெளியிட்டது. இதில் எம்.ஜி.ஆரின் பிரபல பாடலான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற பாடல் வரியை பட தலைப்பாக வைத்துள்ளனர். மேலும் படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலர் பாணியில் வடிவமைத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்த படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடிக்க, ஷிரின் கஞ்ச்வாலா நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/2ZikIaCiC3c.jpg?itok=il4HtqUO","video_url":"