/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EtrdbXIVcAEKaQH.jpg)
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. ரெஜினா கெசன்ட்ரா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டே நிறைவடைந்தும், ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்காமல் இருந்தது. முன்னர் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.
இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்தகவலை அறிந்து உற்சாகமான ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)