சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'.இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர்ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வரும் 13 ஆம் தேதி (நாளை)திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படக்குழு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். இதில் பேசிய படத்தின் நெல்சன், "படத்துல பணியாற்றிய எல்லாருக்கும் நன்றி. நான் மாறன் சார் முதலில் கதை கேட்க மாட்டாருன்னு நெனச்சேன். ஆனால் கதையை கேட்டுட்டு அவருக்கு தோன்றியதை சொன்னாரு, நான் எனக்கு தோன்றியதை சொன்னேன். இப்படி தொடர்ந்து 5 நாள் இந்த கதை விவாதம் போச்சு.பீஸ்ட் படத்துல ஒரு ஓப்பனிங் சீன் வரும், அதை ஒரு சண்டைக் காட்சியுடன் ஓப்பன் பண்ணா நல்லா இருக்கும்னு ஐடியா சொன்னார். அந்தளவுக்கு இந்த படத்தில் அவரோட பங்களிப்பு இருக்கு. மாறன் சார் ஒரு ப்ரொடியூசர் மாதிரி இல்லாமல் அவருக்குநெருக்கமான படம்னுநினைச்சு பண்ணிக்கொடுத்தார்.
விஜய் சார் தான் இது எல்லாத்துக்கும் காரணம். இந்த கதை கேட்டுட்டு கண்டிப்பாக பண்ணலாம்ன்னுசொன்னார். உடனே கஷ்டப்பட்டு உழைக்க நான் ரெடி, நீங்க மீதி விஷயத்தைப் பார்த்துக்கோங்கன்னுசொன்னார். அவர்சொன்ன மாதிரியேநல்லாப் பண்ணி கொடுத்தார். படமும் நல்லா வந்துருக்கு. நாளைக்கு எல்லாரும் திரையரங்குகளுக்கு போய் பாருங்க" எனத் தெரிவித்தார்.