Advertisment

“நண்பன் என்பதற்காக உதவி பண்ணக்கூடிய ஆள் நான் கிடையாது” - நெல்சன் 

nelson speech in bloddy beggar pre release event

இயக்குநர் நெல்சன் முதல் முறையாக தயாரித்துள்ள படம் ‘ப்ளடி பெக்கர்'. ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் அவர் தயாரித்து வழங்கும் இப்படத்தில் கவின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நெல்சனுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்டின் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளியன்று(31.10.2024) வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்நிகழ்வில் நெல்சன் பேசுகையில், “வேட்டை மன்னன் படத்தின் போது என்னிடம் சிவபாலன் சேர்ந்தார். ஜெயிலர் படம் வரையுமே என்னிடம் வேலை பார்த்தார். ஜெயிலர் பட சமயத்தில்தான் இந்தக் கதை சொன்னார். நீண்ட நாட்கள் என்னிடம் வேலை பார்த்ததால் அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் ஜெயிலர் வெற்றிப் பெற்றால் மட்டுமே சிவபாலன் படம் தயாரிப்பேன் என்று சொல்லியிருந்தேன். இதனால், ஜெயிலர் படம் வெற்றி பெற வேண்டும் என அவர்தான் மிகவும் எதிர்பார்த்திருந்தார். படம் வெற்றி பெற்றதும் ‘ப்ளடி பெக்கர்’ தயாரிப்பது உறுதியானது. கவினை வைத்து செய்யலாம் என சிவபாலன் சொன்னார். ஆனால், இந்தக் கதைக்கு கவின் சரியாக இருப்பார் எனத் தோன்றவில்லை. தனுஷ், விஜய்சேதுபதி என சில பெயர் சிவபாலனிடம் சொன்னேன். ஆனால், அவர் கவின் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து லுக் டெஸ்ட் செய்தார்.

Advertisment

அப்போதே இந்தக் கதையில் சிவபாலன் எவ்வளவு டீடெய்லிங்காக செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. படத்தின் முதல் பாதி நன்றாகவே செய்திருந்தார்கள். அதன் பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. முழுப்படமும் பார்த்தபோது சிவபாலனுக்குப் பிறகு சிறப்பாக வேலை செய்திருப்பது கவின்தான். பல காட்சிகளில் சிறப்பாக கவின் நடித்திருக்கிறார். கவின் வேண்டாம் என்று ஆரம்பத்தில் நிராகரித்தது தவறான முடிவு என புரிந்தது. த்ரில்லர் படமான இதில் டார்க் காமெடி, எண்டர்டெயின்மெண்ட் என எல்லாமே இருக்கும். தீபாவளிக்கு அமரன், பிரதர் படங்களும் வெளியாகிறது. அவர்களும் என்னுடைய நண்பர்கள்தான். அந்தப் படங்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

சினிமா என்பது சீரியஸான பிசினஸ். நம்மிடம் பணம் இருக்கு, அதனால் படம் தயாரிக்கலாம் என பண்ண கூடாது. இந்தக் கதையை படமாக்கினால் நன்றாக இருக்கும் என நமக்கு தோன்றும். அப்படி பண்ணினதுதான் இந்தப் படம். என்னுடைய நண்பர் என்பதற்காக உதவி பண்ணக்கூடிய ஆள் நான் கிடையாது. நட்பு, வேலை எல்லாமே சேர்ந்து ஒரு கூட்டணியாக அமைய வேண்டும். கவின், ரெடின், நிர்மல், சிவபாலன் என எல்லாருமே நான் டைரக்டர் ஆகுவதற்கு பல வருஷங்களுக்கு முன்பு இருந்தே தெரியும். அப்போதும் அவர்கள் போகவில்லை, இப்போதும் போகவில்லை. எல்லாருமே ஒன்றாக இருக்கிறோம்” என்றார்.

kavin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe