/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/355_7.jpg)
சன் பிக்சர்ஸ்தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார்இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் கடந்த 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியது. பெரும் எதிர்பார்ப்புகளுக்குமத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனங்களையேபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் ரஜினியின் 169 படத்தைஇயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ்நிறுவனம் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்சனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "தலைவர் 169 படத்தை முடித்து விட்டு தனுஷ் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. நானே வருவேன், திருச்சிற்றபலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படங்களின்பணிகள் முடித்தவுடன் நெல்சன் படத்தின் பணிகளில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது, விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)