'அலப்பற கெளப்புறோம்...' - அல்லு அர்ஜுனை இயக்கும் நெல்சன்

nelson next with allu arjun

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் கடந்த மாதம் வெளியான நிலையில், வசூலில் ரூ. 650 கோடியைக் கடந்து வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ரஜினி பேசியது அண்மையில் வெளியானது. அதில் படம் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் நெல்சனின்அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனை அடுத்து இயக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அவரைச் சந்தித்துக் கதை கூறியுள்ளதாகவும் இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ஜவான் படத்தில் இசையமைத்ததற்காக எக்ஸ் தளத்தில் அனிருத்தை பாராட்டினார் அல்லு அர்ஜுன். அவரின் பாராட்டுக்கு பதிலளித்த அனிருத் நன்றி தெரிவித்திருந்தார். உடனே "வெறும் நன்றி மட்டும் போதாது. நல்ல பாடல்களும் வேண்டும்" என அல்லு அர்ஜுன் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கும் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

allu arjun
இதையும் படியுங்கள்
Subscribe