Advertisment

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கவினை களமிறக்கிய நெல்சன்

nelson kavin Bloody beggar release date announced

Advertisment

ஸ்டார் படத்தை தொடர்ந்து ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் கவின். அறிமுக இயக்குநர் வி.கர்ணன் அசோக் இயக்கும் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆன்ரியா நடிக்க வெற்றிமாறன் வெளியிடுகிறார். அடுத்ததாக நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் கிஸ் படத்தில் நடிக்கிறார். மேலும் நயன்தாராவுடன் ஒரு படம் இணைந்து நடிக்கிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே நெல்சன் தயாரிப்பில் ‘ப்ளடி பெக்கர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் நெல்சன் தயாரித்து வழங்கும் இப்படத்தை சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்டின் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு நெல்சன் பட ஸ்டைலில் புரோமோ வீடியோ மூலம் கடந்த மே மாதம் வெளியானது. அதில் படத்தின் தலைப்பிற்கேற்ப யாசகம் பெறுபவர் லுக்கில் கவின் இடம்பெற்றிருந்தார். மேலும் அந்த வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளதாக ஒரு புது போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தீபாவளியன்று (அக்டோபர் 31) சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

actor sivakarthikeyan kavin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe