/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/306_10.jpg)
சன் பிக்சர்ஸ்தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார்இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியது. பெரும் எதிர்பார்ப்புகளுக்குமத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனங்களையேபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தை இயக்கவுள்ளதாக பீஸ்ட் படத்தின் ரிலீஸ்க்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால் பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினிகாந்த் தலைவர் 169 படத்தின் இயக்குநரைமாற்றி உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்தசெய்திகள் கடந்த ஒரு வார காலமாகவேசமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்து வந்தன.
இந்நிலையில் 'தலைவர் 169' படத்தை நெல்சன்தான் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜூலை மாத தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் சினமாவட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனைஉறுதி செய்யும் வகையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் உள்ள சுய விவரத்தில் தலைவர் 169 படத்தை மீண்டும் இணைந்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)