Neetu Chandra said businessman offered her 25 lakh per month salaried wife

Advertisment

பிரபல பாலிவுட் நடிகை நீத்து சந்திரா மாதவன் நடிப்பில் வெளியான 'யாவரும் நலம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் ஆதிபகவன், சேட்டை உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனிடையே இரண்டு ஹாலிவுட் படத்திலும் நீத்து சந்திரா நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை நீத்து சந்திரா தன்னை ஒரு தொழிலதிபர் மாதம் ரூ. 25 லட்சத்திற்கு ரகசிய மனைவியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், “ஒரு வெற்றிகரமான நடிகையின் தோல்விக் கதைதான் எனது வாழ்க்கை. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை 12 தேசிய விருதுகள் பெற்ற நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது வேலை இல்லாமல் தவிக்கிறேன். அதனால் ஒரு தொழில் அதிபர் என்னிடம் மாதம் ரூ.25 லட்சம் தருகிறேன் ரகசிய மனைவியாக இருக்க முடியுமா என்று கேட்டார். அவர் அப்படி கேட்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தற்போது பணமும், வேலையும் இல்லாததால் மிகுந்த கவலையில் இருக்கிறேன்.

சமீபத்தில் முன்னணி இயக்குநர் ஒருவர் படத்தின் ஆடிஷனுக்காக அழைத்திருந்தார். ஆனால் அந்த இயக்குநர் ஆடிஷன் முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் என்னை நிராகரித்தார். என்னை திட்டமிட்டே நிராகரிப்பதாக உணர்கிறேன். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன். சில முறை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கூட வந்திருக்கிறது” என்றார். நீத்து சந்திராவின் இந்த பரிதாபமான நிலையை நினைத்து அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.