Advertisment

"இரண்டாவது பாகம் தொடங்கப்படும்" - சீனுராமசாமி அறிவிப்பு

neerparavai 2 will start seenuramasamy tweeted

சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் 'நீர்ப்பறவை'. இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலும், சுனைனாவும் நடிக்க சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பலரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Advertisment

இந்நிலையில்இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சீனுராமசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், "நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும். இப்படத்தை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைப்பெருமக்களுக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதுவரை 8 படங்களை இயக்கியுள்ள சீனுராமசாமி எந்தப் படத்துக்கும் இரண்டாம் பாகம் உருவாக்குவதாக அறிவித்ததில்லை. முதல் முறையாக இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவித்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் அடுத்த அப்டேட்டை சீனுராமசாமி வெளியிடுவார்என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனுராமசாமி மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றொரு படம் 'இடம் பொருள் ஏவல்'. இப்படத்தில் விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி, நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் விரைவில் இப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

actor vishnu vishal seenu ramasamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe