pa ranjith

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித், படங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்திவருகிறார். தன்னுடைய நீலம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து இளம் படைப்பாளிகளை தொடர்ந்து அறிமுகம் செய்துவருகிறார். அந்த வரிசையில், தன்னிடம் துணை இயக்குநராக பணியாற்றிய தினகரன் சிவலிங்கம் என்பவரை அடுத்ததாக அறிமுகம் செய்கிறார். இவர், கபாலி, காலா ஆகிய படங்களில் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குநராக பணியாற்றியவர் ஆவார்.

இப்படத்தை நீலம் ப்ரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது. இப்படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள நீலம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம், இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.