neelam production blue star first look poster released

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா. ரஞ்சித் 'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பல படங்களைத்தயாரித்து வரும் நிலையில்கிரிக்கெட் விளையாட்டைமையமாகக் கொண்டு இயக்குநர்ஜெய்குமார் என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில்ஷாந்தனு, அசோக்செல்வன்,கீர்த்தி பாண்டியன்,யோகிபாபுஉள்ளிட்ட பலர் நடிக்ககோவிந்த் வசந்தா இசைப் பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின்படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு 'ப்ளூ ஸ்டார்' (BLUE STAR)எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரைபார்க்கையில் அசோக் செல்வன் தலைமையில் ஒரு டீமும் ஷாந்தனு தலைமையில் ஒரு டீமும் கிரிக்கெட் விளையாடத்தயாராகவுள்ளனர்.ஃபர்ஸ்ட் லுக்கோடுஇணைத்து படத்தின் ஆந்தம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisment

இப்பாடலை பார்க்கையில் ரஞ்சித் என்ற கதாபாத்திரத்தில் அசோக் செல்வனும் ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் ஷாந்தனுவும்நடித்துள்ளனர். இருவருக்கும் கிரிக்கெட்டில் கடும் போட்டி நிலவுகிறது. அந்த போட்டிக்கான காரணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருப்பதைஉணர முடிகிறது. இப்பாடலைதெருக்குரல் அறிவு எழுதியுள்ளார். பாடலில்வரும் "ஆளவிட்டு... ஓடவிட்டு...தேடவிட்டு... யாருகிட்ட வச்சிக்கிட்ட... வேற மாறி கிரிக்கெட்டு... அங்கபாரு... இங்கப்பாரு... எங்க வேனாகேட்டு பாரு... எங்களாண்டமோதிப்பாரு ப்ளூ ஸ்டார் கிரிக்கெட்டு" என்று வரும் அறிவு குரலில் வரும் வரிகள் கவனத்தை ஈர்க்கிறது.