Vijay Antony

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோடியில் ஒருவன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தை ரம்ஜான் தினத்தையொட்டி வெளியிட முடிவெடுத்த படக்குழு, அதற்கான முன்னோட்டமாகப் படத்தின் ட்ரைலரை கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டது. பின், நாடு முழுவதும் ஏற்பட்ட கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது.

Advertisment

தற்போது இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. படத்தை வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரைக்குக் கொண்டுவர முடிவெடுத்துள்ள படக்குழு, அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள 'நீ காணும் கனவே...' என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் நிறைந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுவருகிறது.

Advertisment