தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ ஃபாரெவர்’. ஜென் சி தலைமுறை ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை இப்படம் காமெடி கலந்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் சவுத் இந்தியா அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
32 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 27 நாட்களில் முடித்துள்ளது படக்குழு. சென்னை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்த நிலையில், படத்தின் திரைக்கு கொண்டுவரும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.