Shah Rukh Khan residence

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மும்பையிலிருந்து கோவா நோக்கி சென்ற ஒரு சொகுசு கப்பலில் போதை விருந்து நடந்த விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 18 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆர்யன் கானை பிணையில் எடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஆர்யன் கானுக்கு ஏற்கனவே இரண்டு முறை பிணை மறுக்கப்பட்ட நிலையில், அடுத்த செவ்வாய் கிழமை அவரது மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Advertisment

இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தினர். சோதனையின் முடிவில் நடிகை அனன்யா பாண்டேவை விசாரணைக்கு வந்து ஆஜராகுமாறு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. ஷாருக்கான் வீட்டில் நடந்த ரெய்டு குறித்த தகவல்கள் எதுவும் தற்போதுவரை வெளியாகவில்லை.

Advertisment

மும்பை ஆர்துர் சாலை சிறையில் உள்ள தன்னுடைய மகனை இன்று காலை ஷாருக்கான் நேரில் சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.