Advertisment

தமிழில் நஸ்ரியா ரீ என்ட்ரி

nazriya tamil latest update

நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியா, ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதன் பின்னர் பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.

Advertisment

பின்பு கூடே என்ற மலையாளப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து மலையாளத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அவர் கடந்த ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'அடடே சுந்தரா' மூலம்தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் ரீ என்ட்ரிக்குப் பிறகு தமிழில் எந்தப் படமும் கமிட்டாகாமல் இருந்தார்.

Advertisment

இந்நிலையில் தமிழில் உருவாகும் ஒரு வெப் தொடரில் நடிக்கக் கமிட்டாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உருவாகும் கதை எனவும் அதனால் முதன்மைக் கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யா பிரதாப் என்பவர் இயக்கவுள்ளதாகச் சொல்லப்படும் இத்தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

nazriya nasim
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe