Advertisment

திருமணம் எனும் நிக்காஹ் பட சாயலில் வெளியான நஸ்ரியா பட டீசர்

Nazriya movie Teaser released in the guise of thirumanam enum Nikah

தமிழ் சினிமாவிற்கு நேரம் படம் மூலமாக அறிமுகமானவர் நஸ்ரியா. அதனைத் தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானார். பின்னர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். 2018-ல் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'கூடே' படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுத்தார். தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்டி சுந்தரானிகி’ படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் `அடடே சுந்தரா’ படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டு மதத்தை சேர்ந்தவர்கள் காதலிப்பதை காமெடியுடன் சொல்லுவதாக இப்படம் அமைந்துள்ளது. ரோகினி, நதியா, அழகன் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார். தெலுங்கில் உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நஸ்ரியா திரைப்படம் வெளியாகவுள்ளது. கடைசியாக தமிழில் நஸ்ரியா நடிப்பில் வெளிவந்த திருமணம் எனும் நிக்காஹ் படத்திலும் இதே போல் இரண்டு மதத்தை சேர்ந்தவர்கள் காதலிப்பதை சுவாரசியமாக சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

nazriya nasim naani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe