/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/82_8.jpg)
18-ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் சிவகங்கை பகுதியை ஆண்டவர் 'வீரமங்கை வேலுநாச்சியார்'. இவர், 'வெள்ளைக்கார ஆதிக்கத்தை எதிர்த்து கலகம் செய்த முதல் பெண்' எனத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறார். இந்த நிலையில், இவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இயக்குனர் சுசி கணேசன் இயக்க இருக்கும் இப்படத்தில், வேலுநாச்சியாராக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகை நயன்தாரா தரப்புஇதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'இது அடிப்படை உண்மையற்ற வதந்தி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)