nayanthayara about his 3rd anniversery

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து கடந்த 2022 ஜூன் 9ஆம் தேதி கரம் பிடித்தனர். இவர்களுக்கு ‘உயிர் ருத்ரோநீல் என் சிவன்’ மற்றும் ‘உலக் தெய்விக் என் சிவன்’ என இரட்டை ஆண்குழந்தை இருக்கிறது.

Advertisment

இந்த நிலையில் இந்த தம்பதி இன்று மூன்றாவது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதனையொட்டி கணவர் மற்றும் குழந்தைகளுடனான புகைப்படங்களை தனது இன்ஸ்டகைராம் பக்கத்தில் பகிர்ந்த நயன்தாரா, “என் ஆன்மா விரும்பியது உங்களைத் தான், நாம் இருவரில் இருந்து தொடங்கி நால்வராக மாறியது வரை. காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீ எனக்குக் காட்டினாய். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பார்ட்னர். என்றென்றும் உன்னை காதலிப்பேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் தனது பதிவில், “என் உயிர் நயன்தாராவே, நீ தான் என்னுடைய புன்னகைக்கும் மகிழ்ச்சிக்கும் மிக முக்கியமான காரணம். உன்னை முழு மனதுடனும் ஆன்மாவுடனும் நேசிக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இருவரது பதிவினிலும் ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment