Nayanthara Valentines Day wishes Vignesh Shivan sharing video social media

Advertisment

தமிழ்சினிமாவில் 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராஇருவரையும் வைத்து 'நானும் ரௌடி தான்' என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடுகாது கேளாத மாற்றுதிறனாளியாகநடித்த நயன்தாராவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இத்தகவலை உறுதி செய்தனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு பூங்கொத்து கொடுத்து காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான விடியோவைதனது சமூகவலைத்தளபக்கத்தில் பகிர்ந்தவிக்னேஷ் சிவன், "அவள் வந்து பூங்கொத்து கொடுத்தது முதல் முறை போல் இருக்கிறது" எனக் குறிப்பிட்டு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களைகூறியுள்ளார்.தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.